வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

03/08/2014

மக்கள் பிரச்னைகள் பற்றி சட்டசபையில் பேச முடியவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!மதுரை: தமிழகத்தில் நிலவும் வறட்சி, விலைவாசி உயர்வு, குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட மக்களின் பிரச்னைகள் குறித்து சட்டசபையில் பேச முடியவில்லை. ஆனால், ஜெயலலிதாவை புகழ்வதும், பாராட்டுவதும் மட்டுமே நடக்கிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.சட்டசபையில் பட்ஜெட் தொடர் முழுவதும் திமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து Ôசட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மதுரையில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தளபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை புகழ்வதும், பாராட்டுவதும் மட்டுமே நடக்கிறது. சபாநாயகர் தனபால் இதைச் சிறப்பாக செய்கிறார். தொகுதி மேம்பாடு, மக்களின் குறைகளைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேச முடியவில்லை. மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். இதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்தார். வீட்டுவசதித்துறை அமைச்சரோ, எதிர்க்கட்சியினரை ‘ஓடுகாலிகள் ஓடுகிறார்கள்’ என்கிறார். மறுநாள் அமைச்சர் பேசியது நியாயமா, சபை குறிப்பிற்கு அழகா என கேட்டோம். அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என வாதிட்டோம். பல கட்சி தலைவர்களும் குரல் எழுப்பினர். ஆனால், அப்படி பேசலாம் என சபாநாயகர் கூறுகிறார்.

முதல்வரை, அமைச்சர்களை பார்த்து நாங்கள், ஓடுகாலி என்றால் அதை சபை குறிப்பில் இருந்து நீக்காமல் இருப்பார்களா? அப்படி சொல்லும் வகையில் எங்களை தலைவர் கருணாநிதி வளர்க்கவில்லை.வறட்சி, விலைவாசி உயர்வு, குடிநீர் பஞ்சம் குறித்து பேச எழுந்தால் அனுமதிக்க மறுக்கின்றனர். தமிழகத்தில் சிறுமிகள் முதல் வயதானோர் வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கிறது. இது குறித்து பேச முயன்றால் தடுத்து நிறுத்துகின்றனர். இதற்கும் வழக்கு போடலாம். இதற்காக அஞ்சி, ஒடுங்கி, நடுங்கி, மூலையில் ஒளிந்து கொள்பவர்கள் நாங்கள் அல்ல. எதையும் சந்திக்க தயார். முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட ஆளுங்கசியினர் அனைவரும் திட்டமிட்டு எங்களை வெளியேற்றியதாக கூறியதால் அவதூறு வழக்கு போட்டுள்ளனர். சபை வளாகத்தில் இருந்து பேசியது குறித்த வழக்கை நீதிமன்றம் எடுக்கவே முடியாது. ஆனாலும், ஜெயலலிதாவை போல் நூறு, இருநூறு முறை வாய்தா வாங்க மாட்டோம். வழக்கைச் சந்திப்போம்.

No comments:

Post a Comment

Labels