வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

26/07/2014


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே சேகர் அவர்களின் ஏற்பாட்டில் புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கு கணிணி., தையல் எந்திரம்., அழகுகலை இருக்கைகள் போன்றவை திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள் இதில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறிப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு நம்முடைய சேகர் பாபு அவர்களுடைய சீறிய முயற்சியோடு 2014 தாய்மார்களுக்கு, சகோதரிகளுக்கு சகோதரர்களுக்கு நலதிட்டம் வழங்கக் கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் பேசிட வேண்டும் என்ற உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். சட்டமன்றத்திலே தான் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சேகர் பாபு நடத்தக்கூடிய இந்த நிகழ்ச்சியிலாவது பேசலாம் என்ற உணர்வோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம். ஆனால் நேரம் அதிகமான காரணத்தால் அதிலும் நம்முடைய தாய்மார்கள் வந்து நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு மேலும் நான் உங்களை அதிகமாக சோதிக்க விரும்பவில்லை. எனவே சுருக்கமாக நம்முடைய அன்புக்குரிய தலைவர் பெருமக்கள் மேடையில் இருக்ககூடிய நம்முடைய முன்னோடிகள் இந்த ரமலான் நோன்பை பற்றி மிக விளக்கமாக விரிவாக எந்த நோக்கத்தோடு எந்த உணர்வோடு இதை நடத்திவைக்கப்படுகிறது என்று விளக்கமாக உங்களிடத்திலே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆக இந்த புனித ரமலான் நோன்பினை ஒட்டி இந்த ஆண்டு நம்முடைய சேகர் பாபு அவர்கள் வழக்கம் போல், இந்த நிகழ்ச்சியை சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கிறார் சேகர் பாபுவைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால் திராவிட கழகத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டதற்கு பிறகு, எந்த அளவிற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அங்கு இருக்கும் போதும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் நான் மறுத்திட வில்லை. ஆனால் ஆற்றக்கூடிய அந்தப் பணி பயனற்றுப் போய்விடுகிறது என்ற உண்மையை உணர்ந்த காரணத்தால் நம்முடைய பணி, நம்முடைய உழைப்பு வெற்றிப் பெற வேண்டுமென்று சொன்னால் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் தன்னை இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு அவர் சிறப்போடு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரிடத்திலே நாம் காணக்கூடிய ஒன்று பல செயல்பாடுகளை நாம் அவரிடத்திலே காண்கிறோம். ஆனால் நான் அவரிடத்திலே காணக் கூடிய ஒரு சிறப்பு என்வென்று கேட்டால் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சொன்னால் எப்படி நடத்த வேண்டும் அந்த நிகழ்ச்சி எப்படி வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு கடமையை நிறைவேற்றி வருகிறார். என்னைப் பொறுத்தவரையில் சேகர் பாபுவுக்கு ஈடு யாரென்று கேட்டால் அது சேகர்பாபு தான் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். இதை ஏதோ அவரை ப் பெருமைப்படுத்தி பேசிட வேண்டும் என்பதற்காக அல்ல. அவர் செய்து கொண்டிருக்கிற செயல்பாடுகள் உங்களிடத்திலே பெருமையோடு குறிப்புிட்டுக் காட்டிட வேண்டும் என்ற நிலையிலேதான் நான் இதைக் குறிப்பிட்டேனே தவிர வேறல்ல. இங்கு குறிப்பிட்டார்கள். தொடர்ந்து நான்காம் ஆண்டு. புதிய ரமலான் நிகழ்ச்சி மட்டுமல்ல. தமிழர் திருநாளாக இருக்ககூடிய பொங்கல் திருநாளாக இருந்தாலும் சரி. கலைஞர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவாக இருந்தாலும் சரி. அல்லது மார்ச் 1ம் தேதி கொண்டாடக்கூடிய இளைஞர் எழுச்சி நாளாக இருந்தாலும் சரி. ஆக அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும் அவர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவர் வழக்கமாக வாடிக்கையாக மிகவும் சிறப்போடு கொண்டாடி வருகிறார்கள். 2014ம் ஆண்டு பொங்கல் விழாவிலே வேட்டி, சேலை இலவச தையல் எந்திரம் அழகு நிலைய இருக்கைகள் திருமண உதவி, சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது, என்ற நிலையிலே 2014 பேர்களுக்கு அதேபோல 2014-லே மார்ச் 1 ல் இளைஞர் எழுச்சிநாளையொட்டி 7 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலமாக வழங்கப்பட்டிருக்ககூடிய நலத்திட்டத்தால் பயன் அடைந்திருக்ககூடியவர்கள் எண்ணிக்கை என்ன என்று கேட்டால் 5061 பேர். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளையொட்டி 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலமாக நலத்திட்டங்கள் வழங்கி அதன் மூலமாக பயனடைந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால் 5333 பேர்கள். ஆக இந்த ஆண்டு இந்த 4 நிகழ்ச்சிகளின் மூலமாக 16424 பேர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கியிருக்கிறார்கள் நம்முடைய சேகர் பாபு அவர்கள். அது போல் கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்திய பொங்கல் விழாக்கள் மூன்று புனித ரமலான் நிகழ்ச்சிகள் மூன்று, நான்கு ஆண்டுகள் . கலைஞர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நான்கு ஆக இப்படி பல விழாக்கள் நடத்தி பயனடைந்தவர்களுடைய எண்ணிக்கை மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர்களுக்கு மேலாக இருக்கிறது என்ற புள்ளிவிவரத்தை நான் கையிலே வைத்திருக்கிறேன். அவற்றை எல்லாம் விளக்கிச் சொல்ல நேரமில்லை. ஆக அந்த அளவிற்கு பல நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து நடத்தி அதேபோல் இந்த ஆண்டு இந்த புனித ரமலான் விழாவை முன்னிட்டு 2014 ஏழை, எளிய இஸ்லாமிய பெருமக்களுக்கு நலதிட்டம் வழங்கக் கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடக்கத்திலே சொன்னேன் சட்டமன்றத்திலே பேச முடியாமல் சேகர் பாபு நிகழ்ச்சியிலே பேசலாம் என்று குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்கு காரணம் உண்டு. சட்டமன்றத்திலே இப்போது இருக்ககூடிய நிலை என்னவென்று கேட்டால் எதிர்கட்சியிலே ஒரு முக்கிய கட்சியாக விளங்கிக் கொண்டிருக்க கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்திருக்ககூடிய நாங்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் வரக்கூடாது என்று ஒரு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றியெல்லாம் இங்கு பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்கள். பல்வேறு தியாகங்களை ஏற்றுக் கொண்டு ஏழை, எளிய மக்கள் வாழ வேண்டும் தன்னுடைய சமுதாயம் வளர வேண்டும் என்கிற அந்த நிலையிலே நாட்டைப் பற்றி நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்க கூடிய நிலையிலே அற்புதங்களையெல்லாம் செய்திருக்ககூடிய அந்த வரலாற்று நிகழ்ச்சியை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். சட்டமன்றம் என்பது என்ன சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனையை பற்றி பேசி மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனையை பற்றி ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை தீட்டி அந்த திட்டங்களை சட்டவடிவமாக்கி அதன் மூலமாக அந்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்ந்திட வேண்டும். இது பற்றி விவாதிக்க இது பற்றி பேசிட செயல்படக்கூடிய ஒரு பெரும் மாமன்றம் தான் சட்டமன்றம் என்பதாகும். ஆனால் இன்றைக்கு இருக்ககூடிய தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரையிலே அது மக்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசுகின்ற மன்றமாக இல்லாமல் அதற்கு நேர் மாறாக முதலமைச்சராக இருக்ககூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களை பற்றி புகழ்பாடக்கூடிய ஒரு மன்றமாக அது மாறியிருக்கிறது. சரி முதலமைச்சரை புகழ்பாடினாலும் அது பற்றி கவலையில்லை. அது பற்றி நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருக்ககூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு எதிர்கட்சி வரிசையைக்கூட இன்று நாம் பெற்றிருக்ககூடிய வாய்ப்பை இல்லாமல் இருக்கலாம் அது வேறு. ஆனால் அதே நேரத்தில் இதே தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இதுவரையில் சட்டமன்றத்தில் நின்று தோற்ற வரலாறு நம்முடைய தலைவர் கலைஞருக்கு கிடையாது. பல ஜனாதிபதிகளை தேர்ந்தெடுக்ககூடிய அளவிற்கு அந்த திறமையைப் பெற்றவர். ஏன் இந்திய திருநாட்டிற்கு பிரதமர்களை உருவாக்கித் தந்திருக்ககூடிய தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். மத்தியில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடிய நிலையில் இருக்ககூடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். ஏறக்குறைய 91 வயதை அடைந்திருந்தாலும் 75 ஆண்டுகாலம் பொது வாழ்விலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்த இனத்திற்காக இந்த சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்ககூடிய ஒரு தலைவர். ஆக அந்த தலைவர் கலைஞர் அவர்களை பற்றி விமர்சித்து சட்டமன்றத்திலே பேசிக் கொண்டிருக்கும்போது அதை எப்படி நாம் கேட்டுக் கொண்டிருக்க முடியும். ஆகவே அதை மறுக்கிறோம். விளக்கம் சொல்ல முற்படுகிறோம். அப்படி விளக்கம் சொல்ல முற்படுகிறபோது எங்களை சட்டமன்றத்திலே அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி அனுமாதிக்காத சூழ்நிலையிலே நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி எங்களுக்கு பேச அனுமதி தர வேண்டும் என்று கேட்ட நேரத்தில் கட்டாயமாக பலவந்தமாக அங்கு இருக்ககூடிய சபாநாயகர் எங்களை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிடுகிறார். இது ஒரு முறை அல்ல பல முறை நடந்திருக்கிறது. பலமுறை நடந்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க கூடாது என்று ஒரு சர்வாதிகாரியைப் போல ஒரு சட்டத்தை ஒரு தீர்மானத்தை அவையிலே கொண்டு வந்து அதை நிறைவேற்றி உத்தரவிடுகிறார்கள். அது மட்டுமல்ல நேற்றைய தினம் சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை தவிர்த்து அந்த அவையிலிருக்ககூடிய எதிர்கட்சிகளான விஜயகாந்த் தலைமையில் இருக்ககூடிய அந்த கட்சி. அதேபோல காங்கிரஸ் கட்சி, மனித நேய மக்கள் கட்சி. புதிய தமிழகம் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி என்று 6 கட்சிகள் அந்த கட்சியினுடைய தலைவர்களெல்லாம் சபாநாயகரிடத்திலே நேரிடையாகச் சென்று ஒரு கடிதத்தைக் கொடுத்து நீங்கள் கூட்டத்தொடர் முழுவதும் வெளியேற்றியிருக்ககூடிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை ஜனநாயக கடமையாற்ற அவர்களை அழைக்க வேண்டும் அவர் அவையிலே உட்கார்ந்து பேசிட வேண்டும் தங்களுடைய தொகுதியைப் பற்றி மக்களுடைய பிரச்சினைகளை பற்றி பேசிட வேண்டும் அவர்களுக்கு வாய்ப்புதர வேண்டும் என்று ஜனநாயக முறைப்படி எழுதியும் கொடுத்திருககிறார்கள். ஆனால் என்ன பதில் வந்தது. அதை எழுந்து பேசுவதற்கு முற்பட்ட நேரத்தில் கூட புதிய தமிழகம் கட்சியினுடைய கிருஷ்ணசாமி அவர்கள் பேசக்கூடாது என்று மறுத்திருக்கிறா்ர்கள் அதற்கு கண்டித்து வெளிநடப்பு செய்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் சார்பில் கடமையாற்ற அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த அத்தனை கட்சி தலைவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் இங்கு எடுத்துச் சொல்லுவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் மக்களுடைய பிரச்சனைகளை பேசுவதற்கு சட்டமன்றம் இருக்கிறது என்று சொன்னால் அதை இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்ககூடிய அ.தி.மு.க. எதற்கெல்லாம் பயன்படு்த்திக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் தயவு செய்து உணர்ந்திட வேண்டும். நம்முடைய சேகர் பாபு அவர்கள் ஆட்சியில் இருக்ககூடியவர்கள் கூட இப்படி நிகழ்ச்சியை நடத்துவார்களா இப்படி வழங்குவார்களா என்று ஒரு சந்தேகம். சேகர் பாபு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறபோது நாம்தாம் ஆட்சியில் இருக்கிறோமா அல்லது அ.தி.மு.க. ஆட்சியிலிருக்கிறதா என்று ஒரு சந்தேகம். ஆக எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்று சொன்னாலும் மக்களைப் பற்றிசிந்திக்கின்ற ஒரு மாபெரும் இயக்கமாக திராவிட முன்னேற்ற கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளம் தான் சேகர் பாபு அவர்கள் இன்த சிறப்பான நிகழ்ச்சியை இங்கே எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேர்ற கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் நம்முடைய பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னது போல 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை இஸ்லாமியப் பெருமக்களுக்கு உருவாக்கித் தந்த காரணத்தால் கல்வியில் வேலைவாய்ப்பில் அந்த இட ஒதுக்கீட்டை பெறக்கூடிய அந்த சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 1969ல் … அரசு விடுமுறை அறிவித்ததும் திராவிட முன்னேற்ற கழகம் தான். 83ம் ஆண்டு உருது பேசக்கூடிய முஸ்லீகளை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான். …………. அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மகளிர் கல்லூரி என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததும் கலைஞருடைய ஆட்சிதான். 89ம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான். 1999 முதல் விண்ணப்பிக்கப்பட்ட அனைவருக்கும் ஹெச் பயணம் அனுமதி வழங்கியதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான். 99லேயே தமிழக சிறுபான்மை மேம்பாட்டுக் கழகம் உருவாக்கித் தரப்பட்டது. 2000ம் ஆண்டிலேயே உருது அகாடமி உருவாக்கப்பட்டது. 2001ம் ஆண்டிலேயே காயிதே மில்லத் மணி மண்டபம் அமைத்திட 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டது. அது மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது 2001 முதல் 2006 வரை ஆட்சியிலிருந்த நேரத்தில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி வந்தார்கள். ஆகவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சிறுபான்மை சமுதாயத்தினரை சேர்ந்தவர்கள் மக்கள் போராடிய நேரத்தில் அதற்கு 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு அந்த சட்டத்தை ரத்து செய்து தந்த ஆட்சியும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்லி, சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிக் கொண்டிருக்க கூடிய திராவிட முன்னேற்ற கழகம். எனவே அதற்கு ஒரு சாட்சியாக சான்றாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி சேகர்பாபு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும், பாராட்டலாம். புனித ரமலான் திருநாளை முன்னிட்டு இஸாலாமிய பெருமக்களுக்கு அத்தனை பேருக்கும் என்னுடை வாழ்த்துதலையும் பாராட்டுகளையும் கூறி நன்றி தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்
26Jul2014

No comments:

Post a Comment

Labels