வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



16/07/2014


மாண்புமிகு. தளபதியார் இன்று..
******************************************
வடசென்னை முன்னாள் மாவட்ட கழக செயலாளரும், கழக தணிக்கை குழு உறுப்பினருமான திரு. எல்.பலராமன் அவர்களின், சீனிவாசா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய போது.
இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் மகிழ்ச்சியடைகிறேன் இங்கு திரு. பலராமன் அவர்கள் பேசியது என்னைப் பொறுத்தவரை அவர் உள்ளத்தில் இருப்பதை அப்படியே எடுத்திக்காட்டிப் பேசியிருக்கிறார். நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி முன் வாக்கு மூலம் அளிப்பது போல அவர் பேசியிருக்கிறார். அவர் நிறுவனத்திலேயே அவரின் ஒப்புதல் வாக்குமூலம் போல பேசியிருக்கிறார். நேர்மையாக தமிழ்நாட்டில் உள்ள சிலர் போல வாய்தா வாங்காமல் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.
இங்கு அவர் பேசிய போது என்னால் அவர் உற்சாகமடைந்ததாக சுட்டிக்காட்டினார் ஆனால் உண்மையில் அவரால் தான் நான் ஊக்கமும், உற்சாகமும் அடைந்துள்ளேன். அவர் இங்கு உரையாற்றிய போது, தன்னுடைய சிறு வயது நிகழ்வுகளையெல்லாம் சுட்டிக் காட்டியதுடன் எப்படி தன்னை இந்த தொழிலில் படிப்படியாக உயர்த்திக் கொண்டார் என்பதை எடுத்துச் சொல்லியும் அதே போல கழகத்திலும் உறுப்பினராக, பிரதிநிதியாக, வட்டச் செயலாளராக, பகுதிச் செயலாளராக, மாவட்டக் கழக செயலாளராக இப்பொழுது தலைமை கழகத்தின் தணிக்கை குழு உறுப்பினராக படிப்படியாக உயர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்துதான் நானும் என் சகோதரர் தமிழரசும், தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்பொழுது எங்களுக்கு கை கொடுத்து உதவியவர். 1986-ம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் 75-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது. அப்பொழுது எங்களுக்காக அந்த நிதியை வழங்கினார். நாங்கள் அந்த நிதியைக் கொண்டு தொழில் தொடங்கலாம் என முற்பட்டபோது ஆப்செட் எனப்படும் பேனர் அடிக்கும் தொழிலை தான் தேர்வு செய்து அதற்கான மிஷின்களை வாங்க சிவகாசி சென்றோம். புதியதாக வாங்கும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை. அதனால் பழைய மிஷின்களையே வாங்கி வந்து இந்தப் பகுதிக்கு பக்கத்தில் உள்ள இந்திரா காலனியில் தான் நானும் என் தம்பியும் அதைத் தொடங்க கட்டிடங்கள் கட்டினோம். அப்போது ஒரு நாள் திரு. பலராமன் எங்களுடன் இருந்து அந்தப் பணியை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. இதையறிந்த என் அம்மா எங்களுக்கு சாப்பாடு எடுத்து வரும்போது, அவருக்கு கஞ்சி காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தார். அவர் கூட கேட்டார் எனக்கான இவ்வளவு கஷ்டம் என்று அப்போது என் அம்மா கூறினார். நீயும் என் பிள்ளை மாதிரிதான் என்று.
நிறுவனங்களில் மட்டுமல்ல கழகத்திற்காகவும் கடுமையான உழைப்பை மேற்கொண்டவர். இதே துறைமுகம் பகுதிக்கு அவர் பகுதிச் செயலாளராக இருந்தபோது எத்தனையோ முறை என்னை அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தி அழகுப் பார்த்தவர்., அப்போதெல்லாம் அவர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று வித விதமான உணவுகள் வழங்கி என்னை கண்டிப்பாக சாப்பிட வைத்துதான் அனுப்புவார். அது மட்டுமல்ல மிசா காலத்தில் நான் கைது செய்யப்பட ஒரு முக்கியமான காரணமாக இருந்த வரும் பலராமன் அவர்கள் தான். ஏனென்றால் நான் 1-ம் தேதி கைது செய்யப்படும் முந்தைய நாள் இதே ஏழு கிணறு பகுதியில் நானும் மறைந்த சிட்டிபாபு அவர்களும், இவரும் தான் கூட்டத்தை நடத்தி எங்களது கண்டனத்தை தெரிவித்தோம். அடுத்த நாளில் கைது செய்யப்பட்டோம். இப்படி பல நேரங்களில் நாங்கள் கைது செய்யப்பட போது எல்லாம் எங்களுடன் சிறைக்கு வருவார். பலராமன் அவர்கள் சிறைக்கு வந்தால் தான் எங்களுக்கும் நிம்மதியாக இருக்கும்.
பலராமனின் இந்த கடும் உழைப்பால் உருவாகியிருக்கும் இந்த நிறுவனம் 50-ம் ஆண்டு நிறைவு விழாவை எட்டியுள்ளது. அதன் நூறாவது ஆண்டு காலமாக வளர்ந்து அதில் நீங்களும் நானும் பங்கேற்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாவிட்டாலும் பலராமன் மேல் வைத்திருக்கும் அன்பின் பால் இதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். என்னை இங்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது உள்ளபடியே எனக்கு கூச்சமாக இருக்கிறது. பலராமன் அவர்கள் என் மேல் கொண்ட மரியாதையில் அழைத்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை நான் தான் இதற்கு வரவேற்புரை நன்றியுரை ஆற்ற வேண்டும். திரு. பலராமன் அவர்கள் கட்சியில் மாவட்ட கழக செயலாளராக பதவி வகித்தாலும், ஒரு மாநகராட்சியில் உறுப்பினராகக்கூட இருந்ததில்லை.சட்டமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தும் கூட இந்த துறைமுகம் தொகுதியில் தலைவர் அவர்கள் நிற்க முன் வந்தபோது நான் நிற்பதைவிட தலைவர் நின்றால் தான் இந்த தொகுதிக்கு பெருமை என்று கூறி கழகத்திற்காக என்றும் அரும்பாடுபட்டுக் கொண்டிருப்பவர். அதனால் தான் தலைவர் கலைஞர் அவர்கள் இவரை அழைக்கும்போது, நீ பலராமன் அல்ல பலே ராமன் என்று கூறுவார். இன்று நடந்திருக்கும் இந்த சிறப்பானதொரு நிகழ்ச்சியில் பங்கேற்றதில் உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி. இந்த நிறுவனம் இன்னும் மென்மேலும் வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment


Labels