வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



25/07/2014

எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு தான்
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூக்கு, கலைஞர் பதில்
சென்னை, ஜூலை 25--_ எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு தான் 
என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்விக்கு, கலைஞர்

 பதில 
ளித்துள்ளார்.
என் சொத்து திறந்த கணக்கு புத்தகம்
தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று (24.7.2014) வெளியிட்ட கேள்வி- _ பதில் 
வடிவிலான அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி 
மார்க்கண்டேய கட்ஜூ கேட்டிருக்கிறாரே?
பதில்:- என்னுடைய சொத்துக்கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற 
உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டி யிட்ட போதும், அந்த 
கணக்கு தரப்பட்டு நா ளேடுகளிலும் வந்துள்ளது. அந்த கணக்கை

இந்த நீதிபதி 
இப்போது கேட் கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விவரம் 
தெரிந்தவர் என் பதைப் புரிந்து கொள்ள லாம்.
நான் அய்ந்து முறை முதல்-அமைச்சராக இருந்தவன். சுமார் 70 
திரைப்படங்களுக்கு
என்னு டைய 25 வயது முதல் திரைக்கதை,

உரையாடல் எழுதியிருக்கிறேன். 
எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள தெருவீடுதான்.
இந்தியாவிலே உள்ள எந்த முதல்-அமைச்சரும் இவ்வளவு சிறிய வீட்டில் 
வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாகத் தெரிய வில்லை.

இந்த வீட்டைக் 
கூட எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு பொதுச் சொத்தாக்க, அறக் 
கட்டளைக்கு இப்போதே எழுதிக்கொடுத்து விட்டேன்.
நான் திருப்பிக் கேட் கிறேன்.


இந்த நீதிபதியின் சொத்துக்கணக்கு என்ன? இவர் 
புகழ்ந்த முதல்-அமைச் சரின் சொத்துக் கணக்கு என்ன? சொத்துக்குவிப்பு 
வழக்கு என்மீதா நடக் கிறது? அந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமிழக 
 ஜெயலலிதாவை காப் பாற்றத் தானே யாருடைய 
தூண்டுதலாலோ இவர் தற்போது புதிதாக புறப் பட்டிருக்கிறார்.

ரிமாண்ட் செய்தார்
கேள்வி:- உங்களை ஜாமீனில் விடுவித்தார் என்பதற்காக நீதிபதி ஒரு வருக்கு 
தாங்கள் பல்வேறு உதவிகளைச் செய்ததாக மார்க்கண்டேய கட்ஜூ 

சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அவர் என் மீது மறைமுகமாகச் சாட்டி யுள்ள குற்றச்சாட்டு, என்னை 
ஜாமீனில் நீதிபதி அசோக்குமார் விடுவித்தார் என்பதற்காக அவருக்கு நான் 
பல வகைகளிலும் பரிந்துரை செய்ததாகச் சொல்லியிருக்கிறார்.
நீதிபதி அசோக்குமார் என்னை ஒரு வழக்கில் ஜாமீனில் விடுவித்தார்

என்பதே 
உண்மையல்ல. 2001-ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஜெய லலிதா

அரசில் 
நள்ளிர வில் காவல்துறையினர் வீடு புகுந்து என்னைத் துன் புறுத்திக் கைது 
செய்து, அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் என்னை ரிமாண்ட் செய்ய 
வேண்டுமென்ற கோரிக்கையோடு, நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கே 
போலீஸ் 
வேனில் அழைத் துச் சென்றார்கள். நீதிபதி காவல் துறை யினரிடம் 
எப்.அய்.ஆர். நீதிமன்றத் திற்கு முறைப்படி அனுப்பப் பட்டு விட்டதா? என்று 
கேட்டபோது காவல் துறையினர் இல்லை என்றார்கள். வழக்கு பற்றிய 
விவரங்களும் அவர்களிடம் இல்லை.

இந்த விவரங்கள் இல்லாமல் என்னை 
ரிமாண்ட் செய்யக்கூடாது என்று தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் 
வாதாடி னார். ஆனால், அந்த வாதத்தை மறுத்து விட்டு நீதிபதி அசோக்குமார் 
என்னை ரிமாண்ட் செய் தார் என்பதுதான் உண்மை.
அய்.நா. விசாரணைக்குழு
கேள்வி:- அய்.நா. விசா ரணைக் குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு 
தெரிவித்திருக்கிறதே?
பதில்:- அய்.நா. விசா ரணைக் குழு இந்தியாவுக் குள் வந்து விசாரணை நடத்த 
எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு விசா வழங்க மறுத்திருப்பது 
சிங்களப் பேரினவாத ராஜ பக்சேயின் போர்க்குற்றங் களுக்கும் அப்பட்டமான 
மனித உரிமை மீறல்களுக் கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள் கிறதோ 
என்ற வேதனை யைத் தருகிறது. எனவே இந்திய அரசு இலங்கை மீதான

தனது 
கருத்தினை வெளிப்படுத்த வேண்டு மென்பதோடு, போர்க்குற்ற 
விசாரணையை சென் னையில் நடத்த அனும திக்கும் முடிவினை மேற் 
கொள்ள வேண்டுமென்று உலகத்தமிழர்கள் எதிர் பார்க்கிறார்கள்.
முக்கிய பிரச்சினை
கேள்வி:- அய்.ஏ.எஸ்., தேர்வுக்காகப் பயிலும் மாணவர்கள் தங்களை சந்தித்து 
சில கோரிக்கை களை முன் வைத்தார்களே?
பதில்:- யு.பி.எஸ்.சி., முதல் நிலைத் தேர்விற்கான கேள் வித்தாள்கள் 
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அச்சிடப்படுவதால், இந்தி மொழி பேசும் 
மாநிலங் களைச் சேர்ந்த மாண வர்கள் முதல் நிலைத் தேர்வில் அதிக 
அளவில் தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் சாதகமாக உள்ளது என்றும், இந்தி 
மொழி பேசாத தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 
மாணவர்களுக்கு இந்தத் தேர்வு முறை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், 
முதல் நிலை வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லது மூன்று 
மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் அச் சிடப்பட 
வேண்டுமென் றும் கூறினார்கள். குறிப்பாக வினாத்தாள்- 2 இந்தி மொழி

பேசும் 
மாணவர் களுக்கு சாதகமாக அமை கின்றது என்றும், கிராமப் 
புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு மிகக் கடினமாக உள்ளது என்றும், 
எனவே கேள்வித் தாள்- 2_க்கு தரப்படுகின்ற முக்கியத்துவத்தைக் குறைக்க 
வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். இந்தப் பிரச்சினை குறித்து மத்திய, 
மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, நமது மாணவர்களின் இந்த 
முக்கியமான பிரச்சினை யைத் தீர்க்க முன்வர வேண்டுமென்று வலியுறுத் 
துகிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels