வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

03/03/2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் : கலைஞர் பேட்டி

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழாவையொட்டி மணிவிழா மலர் தயாரிக்கப்பட்டது. இதன் வெளியிட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.
தி.மு.க. தலைவர் கலைஞர் மணி விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். மலர் தயாரிப்பு குழுவினர்கள் டி.ஆர். பாலு எம்.பி. எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பேராசிரியர்கள் ராமசாமி, கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி கலைஞர் பாராட்டினார். 352 பக்கங்களை கொண்ட மணி விழா மலரில் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, சபாநாயகர் மீராகுமார், மற்றும் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா (காஷ்மீர்), நிதிஷ்குமார் (பீகார்), ஷிலா தீட்சித் (டெல்லி), அகிலேஷ்யாதவ் (உ.பி.), பிரிதிவிராஜ் (ம.பி.), உம்மன்சாண்டி (கேரளா), ரங்கசாமி (புதுச்சேரி) ஆகியோர் மு.க.ஸ்டாலினை பற்றி எழுதி உள்ளனர்.

 டெசோ சார்பில்  நீங்கள் 5-ம் தேதியன்று இலங்கை தூதரகத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். இன்னொரு குழுவினர் 4-ம் தேதியன்று முற்றுகை போராட்டம் அறிவித்திருக் கிறார்களே?
 நாங்கள் 3ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டத்தை அறிவிக்காததற்குக் காரணம், அவர்கள் 4-ம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்திருப்பதால் தான்!
மத்திய அரசு தொடர்ந்து இலங்கைப் பிரச்சினையில் தி.மு.கழகத்தின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறதே?
அதை நாங்கள் பல முறை வற்புறுத்தி சுட்டிக் காட்டியிருக்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்கள் உணர்வுகளை உணர்ந்து, அவர்கள் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் மாத்திரமல்ல; உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இதில் இந்தியா எடுக்கும் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
7-ம் தேதி டெல்லியில் நடைபெறும் டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் கலந்து கொள்கிறதா?
அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டுக் காங்கிரசார் இங்கே பேசும்போது இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவாகவும், டெல்லியில் பேசும் போது எதிராகவும் பேசுகிறார்களே?
யார் அப்படி பேசுகிறார்கள்?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் பேசியிருக்கிறாரே?
டி.ஆர்.பாலு: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக டெல்லியில் அவர் பேச வில்லை. 
 அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதற்குப்பதிலாக, இந்தியாவே தீர்மானத்தை முன் மொழியுமா?
இந்தியாவே தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். நான் எழுதியும் இருக்கிறேன். அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இந்தியாவே தீர்மானம் கொண்டு வந்தால், அது இந்திய நாட்டின் கடமை உணர்ச்சியையும், உலகத்  தமிழர்களின் உள்ள உணர்வுகளையும் எதிரொலிப்பதாக அமையும். இந்தத் தீர்மானத்தின் மீது இந்தியா என்ன முடி வெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அக்கறையோடு கவனிக்கிறார்கள்; நாங்களும் தான்!
மதுவிலக்குப் பிரச்சினைக்காக காந்தியவாதி சசிபெருமாள் 33 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். தற்போதைய சூழலில் மதுவிலக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?
சாத்தியம் இல்லை என்பதற்கு பல சான்றுகளை ஏற்கனவே அளித்திருக்கிறோம். சாத்தியம் இல்லை என்பதற்காக நல்ல காரியங்களை விட்டு விட முடியாது. அளவுக்கு மீறி மது புழக்கத்தையும், அதைப் பயன் படுத்துவதையும் அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்விக்குத் தான் சமூக ஆர்வலர்களும், அரசு நடத்துகிறவர்களும் விடையளிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
எப்படி இருக்க வேண்டும் என்று கேளுங்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
ஒவ்வொரு முறையும் ஆறு மாதத்திற்குள் மின் வெட்டுப்பிரச்சினையைத் தீர்ப்போம் என்று ஆட்சியிலே இருப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும், மின் வெட்டு நீங்கிய பாடில்லையே?
அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.
இலங்கையில் ராஜபக்சேவை சுப்பிரமணிய சுவாமி  சந்தித்ததைப் பற்றி?
 நீங்கள் அவரையே கேட்டிருக்கலாமே?

No comments:

Post a Comment

Labels