வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



01/03/2013

உழைப்பில் உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்! கி.வீரமணி வாழ்த்து!



திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
இன்று மார்ச் 1இல் 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அருமைத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், சீரிளமைத் திறத்தோடு சிறப்பான உழைப்பின் உருவமாகி, பெரியார், அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் கலைஞரின் தகுதிமிக்க அரசியல் வாரிசாகி, வாகைசூடிடும் கொள்கை வைரமாகும்! 
அடக்கம், அன்பு, கொண்ட கொள்கையில் உறுதி, லட்சோபலட்ச இளைஞர் பட்டாளத்தின் ஈடுஇணையற்ற தளநாயகன், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உழைப்பில் கலைஞர் போல் உயர்ந்து நிற்கிறார்!
மேயராகி, அமைச்சராகி, துணை முதலமைச்சராகி, எதிர்கட்சி தலைவராகவும் ஆகி அவர் வகிக்கும் அரசியல் பொறுப்பு எதுவானாலும் தன் அடிகளை அளந்து வைத்து எதிரிகளையும் வீழ்த்தி வியக்கச் செய்யும் வித்தகர் அவர்!
ஆயிரங்காலத்துப் பயிரான திராவிடர் இயக்கங்களின் அரசியல் சரித்திரத்தில் அடுத்தகட்ட அத்தியாயமாய் பரிணமித்து ஜொலிக்கிறார்!
உலகத்தமிழர்களின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்றவராய் உலா வருகிறார்!

சிறைச்சாலைத் தியாகங்களாலும்,  சீலத்துடன் கூடிய பொதுவாழ்வின் தொண்டறத்தாலும் மிளிறும் இத்தொண்டர்களின் தோழன், இயக்கத்தின் அரண், கட்டுப்பாடு காத்து, தன் தலைவர் கிழித்த கோட்டை தாண்டாத கொள்கைக் கோமானாகி, நாளும் வளர்கிறார், கழகத்தையும் வளர்க்கிறார் - கண்ணியத்துடன் கடமையாற்றும் கழகக் கட்டுப்பாட்டின் இலக்கணமாம் அவர்!
வளர, வளர அவரிடம் ஆர்வம் குன்றாது இருப்பதைப் போலவே, அடக்கம் அவரை உயர்த்திடும் அற்புதக் கவசமாகி அவரது வளர்ச்சிக்கு அதுவே வெளிச்சமாகவும் உதவுகிறது!

60ஆம் ஆண்டு அகவையில் கூட இளைஞர் போன்று ஓடி ஆடும் ‘ஓயாத தேனீயாகி’,  இவர் எப்படி சலிப்பின்றி இலட்சியப் பயணம் செல்கிறார் என்று சிலர் வியக்கக் கூடும்.

அந்த இரகசியம் ஊர் அறிந்தது; உலகறிந்தது.
95 வயதிலும் போராட்டக் களம் காணவே ஆயத்தமான தலைவர் தந்தை பெரியார்தம் ஈரோட்டுக் குருகுல இணையற்ற மாணவராம் 90 வயது இளைஞர் நம் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் ஆணை ஏற்று, செயல்படும் இவர் 60 வயது இளைஞர் என்பதுதான்! 
இவர் எல்லாம் பெற்று, எதிர்காலத்தை மட்டுமல்ல,  நிகழ்காலத்திலும் வரலாற்று வைரவரிகள் எழுதிட, வளர்ந்து உயர்ந்திட வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!

No comments:

Post a Comment


Labels