வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

18/02/2013


ஈழப் பிரச்னையில் முதல்வர் நாடகமாடுகிறார்: கலைஞர் குற்றச்சாட்டு

ஈழப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா நாடகமாடுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

அப்போது அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம்தான்(முதல்வர் ஜெயலலிதா) வலியுறுத்தியதாகவும், முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது தொடர் வலியுறுத்தலால் ஆதரித்தது என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால் இதே முதல்வர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பேரவையில் வலியுறுத்தினார்.

அதைப்போல 17.1.2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்றும் குறிப்பிட்டார்.

இதையெல்லாம் ஈழத் தமிழர்கள் மறந்திருப்பர் என்று அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல முதல்வர் ஜெயலலிதா நாடமாடுகிறார் என்று கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Labels