வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



08/02/2013

பழைய தலைமைச் செயலகத்தில் நான் உட்காரக் கூட இடமில்லை: கருணாநிதி 



திருச்சி: தான் அண்ணாவின் தம்பி என்றும், தான் யாரையும் பழிவாங்க மாட்டேன் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திருச்சியில் அம்மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது, இங்கே பேசிவிட்டு சென்ற தம்பி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பேச முடியவில்லை என்றும், அப்படியே பேச முயன்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அதை பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள். காலம் மாறும். அப்படி மாறுகையில் இதுவே திரும்ப நடக்கும் என்று நான் கூற மாட்டேன். ஏன் என்றால் நான் அண்ணாவின் தம்பி. யாரையும் பழிவாங்க மாட்டேன். முதல்வர் ஜெயலலிதா சொன்னதெல்லாம் சட்டம், வேதம் என்று எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளது. நீதிமன்றங்கள் அவரது நடவடிக்கைகளை கண்டித்தும் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ரூ.700-800 கோடி செலவில் செய்து புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை கட்டினோம். அந்த கட்டிடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அங்கு 3, 4 முறை சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. அப்படி இருக்கையில் அந்த கட்டிடத்தை விட்டுவிட்டு பழைய கட்டிடத்தில் சட்டசபை கூட்டம் நடத்துகிறார்கள். பழைய தலைமைச் செயலக கட்டிடத்தில் நான் உட்கார இடமில்லை. மூன்று சக்கர வண்டி உள்ளே செல்ல முடியவில்லை. ராஜ்யசபாவில் 2, 3 உறுப்பினர் இதே போல் செல்ல வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment


Labels