வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

08/02/2013

முப்பெரும் விழா: துபாய் செல்லும் மு.க.ஸ்டாலின்-கி.வீரமணி
துபாய்: துபாய் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பாக வரும் பிப்ரவரி 9ம் தேதி துபாய் இந்தியன் பள்ளி, சேக் ரசீத் உள்ளரங்கத்தில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, நாகை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், குடந்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மற்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். கரகாட்டம், பாட்டுமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இவ்விழாவினை  தேவகோட்டை இராமநாதன் தொகுத்து வழங்குகிறார். 

 stalin veeramani participate mupperum vizha in dubai

முதன் முதலாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வண்ணம் ஸ்டாலின் துபாய் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அமீரகத்தின் அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளுமாறு அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், அமீரக தமிழர்கள் அமைப்பின் அஜ்மான் பிரிவின் தலைவர் மூர்த்தி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments:

Post a Comment

Labels