வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

20/02/2013

'பாலச்சந்திரன் படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் கருணாநிதி': ஸ்டாலின்

சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் புகைப்படத்தைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சியில் உறைந்து போனார் என்று கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடி அமீன் கூட இந்தப் படத்தைப் பார்த்தால் அதிர்ச்சி அடைவான். அப்படி ஒரு கொடூர முடிவை சந்தித்துள்ளான் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன். சிங்கள ராணுவத்தால் பிடிக்கப்பட்ட அவனை எங்கோ ஒரு இடத்தில் உட்கார வைத்து, சாப்பிட பிஸ்கட் கொடுத்து, பின்னர் வெற்று மார்பில் மிக நெருக்கமாக கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்கள இன வெறியர்கள்.
உலகமே பதை பதைத்துப் போயுள்ள இந்தப் படங்களை லண்டனின் சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கொடூரக் கொலைக்கு தமிழக அரசியல் தலைவர்கள், உலக மனித ஆர்வலர்கள் கடும் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இதுவரை வாய் திறக்கவில்லை.
இந்தக் கொடூரப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து அவரது மகனும், கட்சி பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில், படத்தைப் பார்த்து தலைவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். பெரும் துயரத்தில் மூழ்கிப் போனார். அப்செட் ஆகி விட்டார்.
ஈழத் தமிழர்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறை அவரது சோகத்தின் மூலம் வெளிப்பட்டது என்றார் ஸ்டாலின்.

No comments:

Post a Comment

Labels