வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/02/2013

சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்கு தண்டனையை நீக்க



சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்கு தண்டனையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலைஞர்



இது குறித்து திங்கள்கிழமை திமுக தலைவர் கலைஞர்   வெளியிட்ட அறிக்கையில் 

தூக்கு தண்டனை என்பது தற்போதைய இந்திய அரசியலில் மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனை பற்றி கேள்வி எழுந்துபோது, பொதுவாக தூக்கு தண்டனையே கூடாது என்பதுதான் எனது கருத்து.

   
பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனை குறித்து திமுகவின் சார்பில் ஏற்கெனவே வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன்.

இந்த நிலையில், வீரப்பனின் நண்பர்களான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரின் மீது விசாரணை நடத்திய மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தபோது, 2004-ல் நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

தீர்ப்பு வந்து 9 ஆண்டுகளாகியும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த நான்கு பேரும் அனுப்பிய கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த 11-ம் தேதி நிராகரித்ததால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நான்கு பேரும் பிப்ரவரி 16-ம் தேதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 20-ம் தேதி வரை தூக்கிலிட தடை விதித்துள்ளது. இந்த நான்கு பேருக்கும் வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வீரப்பனின் துணைவியாரே கூறியிருக்கிறார்.

1993-ல் அதிமுக ஆட்சியில் வேண்டுமென்றே வழக்கு தொடுக்கப்பட்டதாகவும், சி.பி.ஐ. மறு விசாரணை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

குற்றவாளிகள் தப்பித்தாலும் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பது பொறுப்பில் உள்ளவர்கள் மனதில் கொள்ள வேண்டும். 9 ஆண்டுகள் கால தாமதம் ஏற்பட்டிருப்பதால், தூக்கு தண்டனையை மாற்றி அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக உரிமை உள்ளது என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவரின் உத்தரவு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உள்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்கு தண்டனையை நீக்கி காந்தி தேசம் என்பதை உலகுக்கு இந்தியா நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ள கருத்தை நானும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

இதனை ஏற்று சட்டப் புத்தகத்தில் இருந்து தூக்கு தண்டனையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலைஞர் வலியுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment


Labels