வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



18/02/2013


தனுஷ்கோடி, மண்டபத்தில் வலுவான
இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும்:
மு.க.ஸ்டாலின் பேச்சு





தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க, தனுஷ்கோடியில் இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும்' என தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இலங்கை ராணுவம், தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கும் அவலத்தை, மத்திய அரசுக்கு உணர்த்திடும் வகையில், ராமேஸ்வரத்தில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கி, மீன்களை கொள்ளையடித்து, வலைகளை சேதப்படுத்தும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. 
தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி, பிரதமர் மன்மோன்சிங், சோனியாவுக்கு திமுக தலைவர் கலைஞர் கடிதம் எழுதினார். மத்திய அரசும், இலங்கை அரசிடம் பேச்சு நடத்தியது, ஆனால், மீனவர் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. 
1991-2011ல் இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது, 167 முறை தாக்கியதில், 85 மீனவர்கள் இறந்தனர். 146 படகுகள் பறிமுதல் செய்தும், 746 மீனவர்கள் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இலங்கை ராணுவத்திடம் இருந்து, மீனவர்களை பாதுகாக்க, கச்சச்தீவை மீட்க வேண்டும். மேலும் தனுஷ்கோடி, மண்டபத்தில் வலுவான இந்திய கடற்படை தளம் அமைக்க வேண்டும்.
"டெசோ' சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம், இதையும் மீறி, மீனவர்கள் தாக்கப்பட்டால் நம்மை அர்ப்பணிக்கும் அளவில், போராட்டம் நடத்துவோம், என்றார்.

No comments:

Post a Comment


Labels