வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



18/02/2013


பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க முடியும் : தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

நான் பேசுவதற்கு முன்பு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் இந்த மாவட்டத்தின் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடியே 1 லட்சத்தை காசோலையாக என்னிடம் தந்தார். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் இது முதல் தவணை என குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, இன்னும் சில தவணைகளில் நிதி தருவார்கள் என நம்புகிறேன். 

தலைவர் கலைஞர் தி.மு.க. பொருளாளராக இருந்தபோது, அறிஞர் அண்ணா அவரிடம் தேர்தல் நிதி ரூ.10 லட்சம் வேண்டும் என்றார். ஆனால் அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.11 லட்சத்தை தேர்தல் நிதியாக திரட்டினார். தற்போது அது ரூ.100 கோடிக்கு சமம். 

நாடாளுமன்ற தேர்தல் வரும் முன்பே, தமிழக சட்டசபைக்கு தேர்தல் வராதா? என்ற ஏக்க பெருமூச்சு பொதுமக்களிடையே வந்து உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம், 1 லட்சத்து ஆயிரத்து 595 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளோம். அதன் விளைவாக மத்திய இணை அமைச்சர் பதவியையும் பெற்று இருக்கிறீர்கள். ஆனால், சட்டமன்ற தேர்தலில் ஏன் தோற்று போய்விட்டோம் என்பதை பற்றி யாரும் பேசவில்லை. அதனை சரிசெய்ய சிந்திக்க வேண்டும். 

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு இருந்தது. நான் மறுக்கவில்லை. பொதுமக்களை ஏமாற்றவும் தயாராக இல்லை. 2 மணி நேர மின்வெட்டை பொதுமக்களுக்கு பத்திரிகைகள், தொலைகாட்சி மூலம் முறையாக தெரிவித்து, யாருக்கும் பாதிப்பு வராமல் பார்த்து கொண்டோம். ஆனால் அந்த 1 மணி நேர, 2 மணி நேர மின்வெட்டை பொறுத்துகொள்ள முடியாத பொதுமக்கள் தேர்தலில் நமக்கு பெரிய தண்டனை வழங்கி விட்டார்கள். 

ஆனால் இன்று தமிழகத்தில் ஏறத்தாழ 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இந்த நிலையில் நான், உங்களை எல்லாம் கேட்டுகொள்வது என்னவென்றால் பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் சரி, குறிப்பிட்ட காலத்தில் வந்தாலும் சரி, தி.மு.க. தொண்டர்கள் தெரு, தெருவாக சென்று வீட்டுக்கு வீடு பொதுமக்களை சந்தித்து, தமிழகத்தில் நடைபெற்று கொண்டு இருக்கும் அ.தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். பொதுமக்களிடம் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக அமைய வேண்டும் என எடுத்து சொல்ல வேண்டும். நாம் ஒற்றுமை உணர்வோடு செயல்பட்டால் நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க முடியும். 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  












No comments:

Post a Comment


Labels