வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



18/02/2013

40 தொகுதியிலும் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்




சேலம் சீல்நாய்க்கன்பட்டி - உடையாப்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகில் சேலம் பராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் தி.மு.க. பெருளாளரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின்  பேசியதாவது:- 

சேலம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபண்டி ஆறுமுகம் இன்று இல்லையே என்ற வருத்தம் உங்களை போல் எனக்கும் உள்ளது. அவர் மறைந்த பிறகு அவரது திருவுருவ படத்தை திறந்து வைத்தேன். அதன் பின்னர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன். இந்த கூட்டம் நடத்த எதிர்ப்பு வந்தது. 
இந்த பகுதியில் கூட்டம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். இதனால் நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்று இந்த கூட்டம் சிறப்பக நடக்கிறது. இங்கு பேசிய பலரும் ஜெயலலிதாவிற்கு கண்டன குரல் எழுப்பினர். ஆனால் நான் அவருக்கு நன்றியை சொல்வேன். காரணம், இந்த கூட்டம் இவ்வளவு சிறப்பக, எழுச்சியுடன் நடக்க போலீசார் அனுமதி தராமல் தடுத்தது தான்.   

இந்த கூட்டம் சார்பில் நன்றியை ஜெயலலிதாவிற்கு தெரிவித்து கொள்கிறேன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், என பலர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. நில அபகரிப்பு வழக்கில்  வீரபண்டி ஆறுமுகம் மீதும் பொய் வழக்கு போடப்பட்டது. 
இவற்றை கண்டு நாம் அஞ்சிவிட வில்லை. அண்ணன் வீரபண்டி ஆறுமுகம் ஜாமீனில் வெளியில் வந்த பின்னர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குண்டர் சட்டமும் தவறு என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. அண்ணன் வீரபண்டி ஆறுமுகம் மறைவுக்கு ஜெயலலிதா ஆட்சி என்றைக்காவது பதில் சொல்லியே தீர வேண்டும்.

வெற்றி தோல்வி மாறி மாறி வரும். அதிக வெற்றி, தோல்வியை நாம் தான் அதிகம் சந்தித்து இருப்பேம். 1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து தலைவர் கலைஞர் தலைமையில் தேர்தலில் வெற்றி தோல்வியை பெற்று வந்தோம். 2011-ம் ஆண்டு நாம் படுதோல்வியை அடைந்தோம். ஏன் எதிர்கட்சி அந்தஸ்ததை கூட நாம் பெற முடியவில்லை. இப்படி தோற்றதால் நாம் நிலைக்குலைந்து பேகவில்லை. 

நாம் தான் மக்களை சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் நியாயமாக பர்த்தால் 2016-ம் ஆண்டுத்தான் தேர்தல் வர வேண்டும். ஆனால் பொதுமக்கள் பராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்ட மன்ற தேர்தலும் வரவேண்டும் என விரும்புகிறார்கள். அந்தளவிற்கு தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு கெட்டு விட்டது. 

இதனால் வருகிற பராளுமன்ற தேர்தலுடன் தமிழத்தில் சட்ட மன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பராளுமன்ற தேர்தல் இங்கு நான் தேர்தல் பணிக்காக ஆணையிடவோ, கட்டளையிடவோ, உத்தரவிடவோ வரவில்லை. உங்களின் ஆலோசனைகளை கேட்கவே வந்து இருக்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து கடமையாற்றவே வந்து இருக்கிறேன். 

சேலம் நாடாளுமன்ற தொகுதியிலும் மட்டுமல்ல, 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற்று அந்த வெற்றியை தலைவர் கலைஞர் காலடியில் சமர்பிக்க ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment


Labels