வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

08/02/2013

அழகிரியை ராஜினாமா செய்யச் சொல்வதுக்கு முன்பு அந்த 'அம்மா' பெங்களூர் கேஸை முடிக்கட்டும்: கருணாநிதி
திருச்சி: அதிமுக ஆட்சியில் கடந்த 19 மாதங்களில் 896 கொலைகள் நடந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சி மற்றும் திருச்சி சிவா எம்.பி. இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று திருச்சி வந்த திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு, கேள்வி: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.1.000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று திமுக மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவார்களா? பதில்: திமுக மத்திய அமைச்சர்கள் மட்டுமல்ல எம்.பி.க்களும் சேர்ந்து நிச்சயம் வலியுறுத்துவார்கள். கேள்வி: காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முலாயம் வரும் செப்டம்பரில் லோக்சபா தேர்தல் வரும் என்றுள்ளாரே? பதில்: அது அவருடைய யூகம். கேள்வி: அப்பொழுது உங்களுடைய யூகம்? பதில்: நாங்கள் யூகத்திலும் இல்லை, வியூகத்திலும் இல்லை. கேள்வி: லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி... பதில்: இது போன்ற பெரிய விஷயங்களை பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டத்தான் திமுக முடிவெடுக்கும். கேள்வி: ராகுல் காந்தி காங்கிரஸ் துணை தலைவாரனதை பாராட்டி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும் பதில் இல்லை, அவரை பார்க்கச் சென்ற ஸ்டாலினையும் அவர் சந்திக்கவில்லையே? பதில்: டெசோ சார்பாக ஸ்டாலின் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இதை திசை திருப்ப சில பத்திரிக்கைகள் கற்பனை செய்து இவ்வாறு தெரிவித்துள்ளன. கேள்வி: எதிர்கட்சியினர் மீது வழக்குகள் பாய்ந்து வருகிறதே? பதில்: யார் விஜயகாந்த் மீதா? வழக்கு போடுவது இந்த அரசுக்கு வழக்கம் தான். கேள்வி: காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக தடையாக உள்ளது என்று தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளது பற்றி... பதில்: அதிமுக அமைச்சர்களின் பேச்சை நான் கவனிப்பதில்லை. அப்படியே அவர்கள் பேச்சுக்கு கருத்து கூறினால் அதை வைத்து திருத்திக்கொள்பவர்கள் யாரும் இல்லை. கேள்வி: திமுகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக மத்திய அரசு இருக்கிறதே? சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இருந்தாலும் தீய, மதவாத சக்திகள், உள்ளே வரக்கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி அன்னிய முதலீட்டை ஆதரிக்கிறோம் என்றீர்கள். கல்லக்குடி உள்ளிட்ட பல களங்களை பார்த்த திமுகவுக்கு பயமா என்ன? பதில்: களங்களை கண்டு கழகம் எப்பொழுதுமே அஞ்சாது. அதே சமயம் மதவாத களங்களை கழகம் விரும்பாது. கேள்வி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி... பதில்: அதிமுக ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள் நடந்துள்ன. இது தான் சட்டம்-ஒழுங்கின் இன்றைய நிலை. கேள்வி: மு.க. அழகிரி மீது ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியது பற்றி... பதில்: முதலில் அந்த அம்மாவை பெங்களூர் வழக்கை முடிக்கச் சொல்லுங்கள்.


No comments:

Post a Comment

Labels